×

கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஸ்ட்ரச்சரில் கர்ப்பிணி சடலத்துடன் ஓட்டம்

காஷ்மீர்: காஷ்மீரில் சிகிச்சை பலனின்றி இறந்த கர்ப்பிணியின் உடலை உறவினர்கள் ஸ்ட்ரச்சரில் வைத்து எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் நேற்று முன்தினம் காலை மாவட்ட துணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாவட்ட பிரசவம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கர்ப்பிணி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கர்ப்பிணியின் உடலை ஸ்ட்ரச்சரில் வைத்து அவரது உறவினர்கள் சாலையில் தள்ளிச் சென்றனர். இந்த வீடீயோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக மாவட்ட துணை ஆணையர் பஷீத் கூறுகையில், “கர்ப்பிணி பெண் இறந்ததும் மருத்துவ நடமுறைகளை முடிக்காமல் சடலத்தை உறவினர் எடுத்து வந்துள்ளனர். இறந்த பெண்ணின் ரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டால் சடலம்  பெறுவதில் தாமதம் ஏற்படும் என்பதால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியாமல் சடலத்தை எடுத்து வந்துள்ளனர்” என்றார். கடந்த வாரமும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2 குழந்தைகள் பிறந்த நிலையில் இளம்பெண் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடலையும் இதேபோல் மருத்துவமனைக்கு தெரியாமல் எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.Tags : corona examination ,examination , Corona, stretcher, pregnant corpse, flow
× RELATED ஆண் சடலம் மீட்பு