×

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஊரடங்கு என நிலை குலைந்த சிறு, குறு நிறுவனங்கள்; அவர்களின் கோரிக்கை நிறைவேற்றபட வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதியும் - ஊரடங்கு தளர்வுகளினால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொய்வின்றிச் செயல்பட்டிடவும் எவ்விதத் தயக்கமும் தாமதமுமின்றி அரசு அவர்களை காத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;  சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொலியில் கலந்துரையாடினேன். அடுத்தடுத்த சோதனைகளினால் அத்துறை சிக்கித் திணறுகிறது என்பதை உணர முடிகிறது.

20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கும் இந்த துறை சிக்கி தினரிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. நிறுவனங்கள் மீளவும், தொழிலாளர் நலன் கருதியும் அவர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நடைமுறை மூலதனம் மற்றும் ரொக்க கடன் வரம்பை 25% உயர்த்தி, குறைந்த வட்டியில் வழங்க வேண்டும். மொத்த ஜி.எஸ்.டி.யில் 1-2% நிவாரண உதவி வழங்க வேண்டும். EMI வசூலில் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை கடைபிடிக்க வேண்டும். EMI செலுத்தும் அவகாசம் 6 மாதமாக அதிகரிக்க வேண்டும்.

பணிக்கு செல்வதற்கான அனுமதி சீட்டுகளை கிராம நிர்வாக அலுவலரோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளோ வழங்க வேண்டும். மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். வைப்புத்தொகையும் குறைக்க வேண்டும். 6 மாதங்களுக்கு GST வசூலை தள்ளிவைப்பதோடு பாக்கியை 2 வருடங்களில் மாத தவணையில் செலுத்த அனுமதிக்க வேண்டும். 10 லட்சம் ரூபாய் வரையிலான பருவம்சார் கடன்களின் வட்டிக்கு கால அவகாச நீட்டிப்பு தேவை. 30% மானிய கடன்கள் வழங்கிட வேண்டும். அதற்கு வட்டி வசூல் செய்வதை 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும். தொழிலார்களின் சம்பளத்தில் 50% தொழிலாளர் ஈட்டுறுதி மூலம் மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Tags : companies ,GST ,state ,STF ,MK Stalin , Deflation, GST, curfew, demand, MK Stalin
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...