×

வேலூர்-ஆற்காடு சாலை மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த காட்பாடி சாலை

வேலூர்: வேலூர்-ஆற்காடு சாலை மூடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் காட்பாடி சாலையில் இன்று காலை வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் நேற்று முதல் சத்துவாச்சாரியில் இருந்து காகிதப்பட்டறை வழியாக சிஎம்சி மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை முற்றிலும் முடக்கப்பட்டது. இந்த வழியாக வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் சிஎம்சி மற்றும் பழைய பஸ் நிலையம் செல்ல கிரீன் சர்க்கிள், நேஷ்னல் தியேட்டர் வழியாக சென்று வந்தது.

இந்நிலையில் இன்று காலை ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வேலூர்-காட்பாடி சாலை வழியாக வந்தது. இதனால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் பாகாயம், தொரப்பாடி போன்ற இடங்களிலிருந்து சிஎம்சி மருத்துவமனைக்கு வருபவர்கள் ேபலஸ் கபே வழியாக செல்ல வேண்டும். அவர்கள் சாலையை நடக்கும் வரை வேலூர்-காட்பாடி சாலையில் போக்குவரத்து தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இருப்புறங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடக்கு போலீசார் உடனடியாக போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சரி செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: வேலூருக்கு அனைத்து வாகனங்களும் ஒரே வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் ஒரே நேரத்தில் பணிக்கு வந்ததால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் காய்கறிகள் வாங்கவும், மற்ற அத்தியாவசி பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் காலை நேரங்களில் சென்று வருகின்றனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து நெரிசலால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட காவல்துறை மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : road ,Vellore-Arcadu , Vellore - Arcot Road, Traffic, Katpadi Road
× RELATED உப்பூர் அருகே சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?