×

கிருமி நாசினி, முககவசம் கொடுத்து குடை பிடித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு கல்லூரி மாணவர்கள்

திருப்பூர்: திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் நேற்று குடைபிடித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு -2 சார்பாக பல பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே இணையத்திலும், வாட்ஸ் அப்பிலும் குறும்படம் அனுப்பியும், போஸ்டர்ஸ் அனுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இம்மாணவர்கள் போலீசாருடன் இணைந்து அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் நேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

‘இந்நிகழ்வை, வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட கலெக்டர் வேண்டுகோளுக்கிணங்க குடை பிடித்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே வரவேண்டும். குழந்தைகளை வெளியே அழைத்து வராதீர்கள், ரோட்டில் எச்சில் துப்பக்கூடாது, தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது, அத்தியாவசியப் பொருட்களை வீட்டின் அருகே வாங்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாநகராட்சி சார்பாக பழைய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் காய்கறி சந்தையில் வியாபாரிகள் கட்டாயம் கை உறையும் முககவசமும் அணிந்திருக்க வேண்டும், காய்கறி வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் அலகு -2 குழுவினர்கள் குடைகளை பிடித்து விழிப்புணர்வினை மேற்கொண்டதை போலீசார் பாராட்டி வாழ்த்தினார். பிறகு அனைவருக்கும் கிருமி நாசினி கொடுத்தும், முககவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் கொடுத்தும், கை உறைகளை கொடுத்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.

Tags : Government College ,mouthpiece , Antiseptic, mouthpiece, corona awareness
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்