×

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி மே 7-ம் தேதி முதல் தொடங்கும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி மே 7-ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரங்களை தூதரகங்கள் சேகரிக்கின்றன. வெளிநாடுகளில் உள்ளவர்களில் எவ்வளவு பேர் தாயகம் திரும்ப விரும்புகின்றனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக சர்வதேச போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7 ஆம் தேதி முதல் மீட்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக கட்டண அடிப்படையில் அழைத்து வரப்படுவார்கள் எனவும்,  கொரோனா பாதிப்பு அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள். நாடு திரும்பும் அனைவரும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags : Indians ,Rescue Indians , Overseas, Indians, Central Government
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...