×

சென்னையை புரட்டி போட்ட கொரோனா; இன்று மட்டும் 266 பேருக்கு பாதிப்பு உறுதி; பிறந்த 3 நாட்களே ஆன குழந்தைக்கும் பாதிப்பு; சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 266 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1724 ஆக அதிகரித்துள்ளது.  நாளுக்குள் நாள் சென்னையில் பாதிப்பு மிரட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் இதன் வீரியம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் மூலமாக தான் அதிக பாதிப்புகள் அறியப்பட்டுள்ளன.

கோயம்பேடு பணியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இருந்த போலீசார் டிரைவருக்கும் சோதனை நடந்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 527 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுதாகவும், மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு மார்க்கெட் என்றுதான் யூகிக்கப்படுகிறது.

இதனால் சென்னை மட்டுமல்ல, கோயம்பேட்டுக்கு லோடு இறக்கவும், ஏற்றவும் சென்று வந்த மற்ற மாவட்ட லாரி டிரைவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள லாரி டிரைவர்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், போலீசார், என்ற வரிசையில் ஐபிஎஸ் அதிகாரியும் சேர்ந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் பிறந்து 3, 10, 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* 12 வயதுக்கு உட்பட்ட 190 குழந்தைகளுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* கடலூரில் இன்று பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை

* கடலூரில் இன்று ஒரே நாளில் 122 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி ஆகிய மாவட்டகளில் கொரோனா பாதிப்புடையோர் இல்லை.

Tags : victims ,Chennai ,Infant ,birth ,residents , Madras, Corona, Child, Health Department
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில்...