×

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மே 17-ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மே 17-ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன. இவற்றில் காலையில் இட்லியும், மதியம் கலவை சாதமும், இரவில் சப்பாத்தியும் வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் சென்னையை பொறுத்தவரை கொரோனா பாதிப்பின் காரணமாகா அம்மா உணவாகனங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி இந்த இலவசமாக உணவு வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இன்று காலை முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இட்லிக்கு 1 ரூபாயும், கலவை சாதத்திற்கு 5 ரூபாயும், உணவு என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஏற்கனவே ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை, தொழில்நிறுவனங்கள் இயங்காததால் கஷ்டப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் தங்களுக்கு மீண்டும் இலவசமாக அம்மா உணவகத்தில் உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன் பயனாக இப்போது சென்னை மாநகராட்சி இந்த அம்மா உணவகங்களில் மீண்டும் இலவசமாக உணவு வழங்குவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்; மே மாதம் 17-ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் விலையில்லா உணவு மே 17-ம் தேதி வரை வழங்கப்படும். கட்டணம் இல்லாமல் இங்கு வருபவர்கள் உணவு அருந்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : announcement ,Mother Restaurants ,Chennai ,Municipality , Chennai, Mother Restaurant, Free Food, Corporation
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...