×

கொரோனா பரவல் எதிரொலி: சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். வரும் புதன்கிழமை இரவு 7.28- மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.15 மணிக்கு பௌர்ணமி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவும் , சித்திரை மாதம் நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் முக்கியமானவை.

இந்த விழாக்களில் பல லட்சம் பக்தர்கள் திரளுவார்கள். இதனால், அன்று திருவண்ணாமலையில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அதன்படி இந்தாண்டும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் மே 6 ம் தேதி இரவு 7.01 மணிக்கு தொடங்கி 7 ம் தேதி மாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. ஆனால், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் கடந்த பங்குனி மாத கிரிவலம் ரத்து செய்யப்பட்டது.

 தற்போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பதால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு சித்ரா பவுர்ணமி அன்று வருகிற 7-ம் தேதி  நடைபெற இருந்த கிரிவலமும் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது சித்ரா பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் நடைபெறும். ஆனால் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Pilgrims ,Corona ,spread ,Thiruvannamalai Corona ,Girivalam ,Thiruvannamalai , Corona, Chitra Pournami, Thiruvannamalai, Girivalam, Prohibition
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...