×

அடுத்த சோதனை; நாட்டிலேயே முதன்முறையாக ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ்; அசாமில் 2,500 பன்றிகள் உயிரிழப்பு; மனிதர்களுக்கும் பரவுமா ?

டிஸ்பூர் : நாட்டிலேயே முதன் முறையாக அசாம் மாநிலத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூவுக்கு, 306 கிராமங்களில் இருந்து இதுவரைக்கும் 2,500 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.தற்போது அசாமில் பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அஸ்ஸாம் மாநில கால்நடைத் துறை அமைச்சர் அதுல் போரா கூறியதாவது:

அஸ்ஸாமில் பன்றிகளின் உயிரிழப்புக்குக் காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்துதான் பரவியது. இது அருணாசலப் பிரதேசத்தில் முதலில் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அஸ்ஸாமில் இப்போது பன்றிகளை கொல்கிறது. இந்த வைரஸுக்கும் கொரோனா வைரஸுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக் கூடியது இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் வைரஸ்.

 இந்தியாவில் அஸ்ஸாமில்தான் முதன் முறையாக இந்த ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பன்றிகளை அழிக்காமல் அவற்றைப் பாதுக்காக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள பகுத்கள் வரையறை செய்யப்படுவது போல ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் பகுதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அங்கு பன்றிகளை வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஆரோக்கியமாக இருக்கும் பன்றி இறைச்சியை சாப்பிட எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இவ்வாறு அதுல் போரா கூறியுள்ளார்.

Tags : Assam Spread ,time ,African ,country , African swine flu, virus, Assam, pigs, lethality, humans
× RELATED திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்