×

கொடிய கொரோனா வைரஸை அழிக்கும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை கண்டுபிடித்து சென்னை ஐஐடி மாண்வர்கள் சாதனை

சென்னை: கொரோனா வைரஸ் பட்டவுடன் செயலிழக்கச் செய்யும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது.ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும், கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக வட சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 17 பேர் உயிரிழந்த நிலையில், 226 குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்கள் ஆராய்ச்சி செய்து புதிய பாதுகாப்பு உடையை உருவாக்கி உள்ளனர்.கொரோனா வைரசை அழிக்கக் கூடிய நுண்துகள்களால் ஆன ரசாயனம் சாதாரணத் துணி மீது பூசப்படுகிறது. ரசாயனம் பூசப்பட்ட துணியால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உடை மீது கொரோனா வைரஸ் பட்டாலும் அழிந்துவிடும்.ரசாயனப்பூச்சு உள்ள புதிய பாதுகாப்பு உடையை 60 முறை துவைத்து பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து அடுக்கு கொண்ட என் 95 தரத்திலான முகக் கவசங்களையும் ரசாயனத் துணியால் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரசாயனத் துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை ரூ. 300 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : men ,Chennai ,Chennai IIT , Deadly, Corona Virus, Destroyer, Chemical, Coated, Security Style, Archives, IIT Gentlemen, Adventure
× RELATED சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக்...