×

அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூல்: இதுவரை 100%மாக இருந்த கூட்டம் தற்போது 10%மாக மாறியது

சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தப்பட்டு மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கியதால் ஏழை எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏப்ரல் 22-ம் தேதி முதல் இலவசமாக அம்மா உணவகங்களுக்கு வருவோருக்கு உணவு கொடுக்கப்பட்டு வந்தது. மத்திய மாநில அரசுகள் இணைந்து சில தளர்வுகளை கொடுத்தாலும், சென்னையில் மட்டும் கடந்த 22-ம் தேதி முதல் நேற்று வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கினார்கள். ஆனால் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இங்கு உணவு சாப்பிட வரும் சாமானிய கூலி தொழில் செய்யக்கூடியவர்கள், கட்டட வேலை செய்யகூடியவர்கள், பேயின்ட் வேலை செய்யக்கூடியவர்கள் என எளிய ஏழை மக்கள் தான் இந்த அம்மா உணவகத்தில் பயன்பெற்று வந்தார்கள்.

இந்நிலையில் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிந்தவுடன் இவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே ஊரடங்கு நீட்க்ககூடிய காலங்கள் வரை இந்த அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டணமில்லா உணவுகளை வழங்க வேண்டும் என ஏழை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதனை அரசு உடனே பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கட்டணம் சாதராண நாட்களில் வாங்கப்டும் கட்டணம் தான் தற்போதும் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர். எனவே மே 17 வரை கட்டணமில்லாமல் உணவுகள் வழங்கினால் ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு வருபவர்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.


Tags : mom restaurants ,crowd , Re-charging , mom restaurants, crowd , was 100% ,far has now changed to 10%
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...