×

திரு.வி.க நகரில் 324 , ராயபுரத்தில் 275, கோடம்பாக்கத்தில் 199.. கொரோனா தொற்றால் விழிபிதுங்கி நிற்கும் சென்னைவாசிகள்!!

சென்னை :  தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும், கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக வட சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 17 பேர் உயிரிழந்த நிலையில், 226 குணமடைந்துள்ளனர். மேலும் 1210 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு  வருகிறது.

இந்நிலையில் சென்னையில் எந்தபகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 324 பேருக்கும் ராயபுரத்தில் 275  பேரும்,  கோடம்பாக்கத்தில் 199  பேரும், தேனாம்பேட்டையில் 166 பேரும்,அண்ணாநகரில 130 பேர், தண்டையார்பேட்டையில் 118  பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக  வளசரவாக்கத்தில் 92 பேர் , அம்பத்தூரில் 58 பேர் , அடையார் 29 பேர், திருவொற்றியூர் 22 பேர், ஆலந்தூர் 10,மாதவரத்தில் 9 பேர், பெருங்குடி 10 பேர், சோழிங்கநல்லூரில் 6 பேர், மணலியில் 5  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 63.28 சதவீதத்தினர் ஆண்கள். 36.64 சதவீதத்தினர் பெண்கள். முதல்முறையாக சென்னையில் திருநங்கை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Thiruvananthapuram ,Raipur ,Kodambakkam. 324 ,Kodambakkam , Chennai, Thiruvananthapuram Nagar, Corona, Infection, Confirmation, Madras Corporation
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!