×

கொரோனா தொற்று விரைவில் சீராகும்: நிதி ஆயோக் குழு தகவல்

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்று பரவல் விரைவில் சீராகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிதி ஆயோக் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதில் மாகாராஷ்டிராவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர்.  வைரஸ் பரவல் சமூக பரவல் நிலைக்கு வந்து விட்டதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து நிதி ஆயோக் குழு உறுப்பினரும் மத்திய‍  அரசின் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரண மேலாண்மை குழுவின்  தலைவருமான  வி.கே.பால் கூறியதாவது: தற்போது மூன்றாவது முறையாக ஊரடங்கு மேலும் 2 வாரங்கள், அதாவது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பருப்பதற்கு காரணம், முதல் இரண்டு  முறை அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பலன்களை மொத்தமாக பெறவும் அதன் தொடர் பரவலைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தான்.  

தொற்று  தொடர்ந்து பரவுவதால் சமூகப் பரவலை அடைந்துவிட்டதாக கருத முடியாது. சிறந்த உத்திகளின் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலேயே  உள்ளது. ஊரடங்கிற்கு முன்னர் இருந்த நிலையை விட வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஊரடங்கிற்கு முன், வைரஸ் பரவலின் எண்ணிக்கை 5 நாட்களில் இரண்டு மடங்காக இருந்தது. அதற்கு முன்னர் 3 நாட்களில் இரண்டு மடங்காக  இருந்தது. ஆனால் தற்போது 12 நாட்களுக்கு பின்னரே இரண்டு மடங்காக உயர்கிறது.  இதன் மூலம் தொற்று பரவல் குறையத் தொடங்கி இருப்பது  தெளிவாக தெரிகிறது. இது விரைவில் சீராகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 50 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இதுவரை 7 லட்சம் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கிற்கு பிறகான வாழ்க்கை ஏராளமான மாற்றங்களுடன் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். நோய் தொற்று முற்றிலும் ஒழியும் வரை  அனைவரும் முக‍க்கவசம் அணிய வேண்டும். கூட்டமாக கூடுவது, மத வழிபாடுகள் உள்ளிட்ட சமய சடங்குகள், பெரிய விழாக்கள் ஆகியவை  இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Financial Ayok Group , Corona,: Financial Ayok Group, Curfew
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை