×

செய்யாற்றில் ஊரடங்கை மீறி ஏரியில் மீன் பிடிக்க குவிந்த மக்கள் போலீசை கண்டதும் ஓட்டம்

செய்யாறு: செய்யாறு அருகே கொரோனாவுக்கு அஞ்சாமல் ஏரியில் இறங்கி பொதுமக்கள் மீன் பிடித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள்  வாகனங்களையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்தியாவில், ஊரடங்கு மே 17ம் தேதி வரை உள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் வற்றி சிறிதளவே  உள்ளதால் அதில் உள்ள மீன்களை பிடிக்க செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளான காழியூர், அத்தி, புளியரம்பாக்கம், வெங்கட்ராயன்பேட்டை உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 500 பொதுமக்கள் சிறுவர்களோடு குடும்பம், குடும்பமாக நேற்று ஏரியில் மீன் பிடித்தனர்.

கொரோனா பற்றிய எந்த அச்சமும் இல்லாமல் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியின்றியும் திரண்டு வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் மீன் வலைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும்  பொருட்களை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க வந்தவர்களும் தப்பி ஓடினர். இதையடுத்து,  அங்கிருந்த மீன் பிடி வலைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.


Tags : lake , Do not, curfew, flow, corona virus
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!