×

ஐகோர்ட் மதுரை கிளையில் வீடியோ கான்பரன்சிங்கில்இன்று முதல் வழக்கு விசாரணை

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று முதல் வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலால் ஐகோர்ட் மதுரை கிளையில் அவசர மனுக்களை மட்டும் நீதிபதிகள் விசாரிக்கின்றனர். இந்நிலையில், இன்று முதல்  இரண்டு அமர்வுகளுடன், மேலும் 8 நீதிபதிகள் தனித்தனியே வீடியோ கான்பரன்சிங் முறையில் வழக்குகளை விசாரிக்க உள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பு: நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோரது அமர்வில் பொதுநல வழக்குகள், ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் அப்பீல் மனுக்கள் மற்றும்  குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் விசாரிக்கப்படும்.

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் 2019ம் ஆண்டு வரையிலான  பொதுநல மனுக்கள், ரிட் மனுக்கள் மற்றும் அப்பீல் மனுக்களை விசாரிப்பர்.  நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து நிலை சிவில் துணை மனுக்கள்  மற்றும் 2015ம் ஆண்டு முதலான சிவில் சீராய்வு மனுக்களை விசாரிப்பர். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள், இவற்றின்  நிபந்தனை தளர்த்தம் மற்றும் மாற்றியமைத்தல் உள்ளிட்ட மனுக்களை விசாரிப்பார். நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மோட்டார் வாகனம் மற்றும் வரிகள்,  ஏற்றுமதி, இறக்குமதி, சுங்கம் மற்றும் கலால், வனம் மற்றும் தொழிற்சாலை தொடர்புடைய மனுக்களை விசாரிப்பார்.

 நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், போலீசாருக்கு உத்தரவிடக்கோரும் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி எம்.தண்டபானி, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு தொடர்பான  மனுக்களை விசாரிப்பார். நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, கல்வி, நிலங்கள் தொடர்பான மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஆர்.தாரணி, 2015ம் ஆண்டு  முதலான இரண்டாம் நிலை அப்பீல் மனுக்கள், கம்பெனி அப்பீல் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி, குற்றவியல் அப்பீல் மற்றும்  2018ம் ஆண்டு முதலான குற்றவியல் சீராய்வு மனுக்களை விசாரிப்பார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : branch ,hearing ,iCode Madurai ,video conferencing , Icort Madurai Branch, Videoconference, Prosecution
× RELATED கிளைச்சிறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் வேதனை