×

வேளாண் பொருள் விற்பனைக்கு செயலி

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  கொரோனா வைரசால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக, உழவன் செயலியில், உழவன் இ-சந்தை எனும், சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம், விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளை பொருட்களையும், வியாபாரிகள் தாங்கள் வாங்க விரும்பும் விளை பொருட்களையும், பதிவு செய்து கொள்ளலாம். வியாபாரிகள் மாவட்டம் வாரியாக மற்றும் பயிர் வாரியாக விவசாயிகள் விற்பனை செய்யவுள்ள விளை பொருட்களை, இச்செயலியின் மூலம் பார்த்து, விருப்பம் தெரிவிக்கலாம். வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விபரம் விவசாயிகளுக்கு, உழவன் செயலி வாயிலாகவே தெரிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.Tags : agricultural commodities
× RELATED சீனாவின் Weibo செயலியில் இருந்து பிரதமர்...