×

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது. மத்திய அரசின் புதிய விதிகள் செயல்பாட்டுக்கு வந்தால், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலேயே கர்நாடகம் மேகதாது அணையையும், கேரளம்  முல்லைப் பெரியாறு அணையையும் கட்டி, பயன்பாட்டுக்கு வந்த பிறகு வரன்முறை வழங்குமாறு கோரக்கூடும்.
 
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டால் விவசாயிகளையும், மக்களையும் பாதிக்கக் கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாமலேயே போய்விடும். அது மக்களுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.  மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு செயல்வடிவம் தரப்பட்டால் இந்தியாவின் சுற்றுச்சூழல் மிக மோசமாக சீரழியும்; எனவே, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுக்கான விதிகளை தளர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : government ,Anbumani , Environment, Central Government, Anbumani, Corona, Curfew
× RELATED தொல்லியல் துறை ஆய்வுக்கு...