×

புதுச்சேரியில் நாளை முதல் தொழிற்சாலைகள், கடைகளை திறக்க அனுமதி; மதுக்கடைகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள், கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். உணவகங்களில் காலை 6 மணி முதல் 5 மணி வரை பார்சல்கள் மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்படும். உலகம் முழுவதும் கொரோனா இன்னும் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பாதிப்புகள், உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. இந்தியாவிலும் அதே நிலைமைதான்.

 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40000த்தை தாண்டிவிட்டது. தமிழகத்திலும் கொரோனா தொற்று இன்று மட்டும் 266 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்திருக்கிறது. புதுச்சேரியை பொறுத்தவரையில் பாதிப்பு பெருமளவில் இல்லை. 2 நாட்களாக பாதிப்பு இல்லை. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை ஆலைகள், கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறக்கவும், உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியில் நாளை திறக்கப்படும் கடைகள், தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலத்தவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைகள் திறப்பது குறித்து அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : factories ,Puducherry ,shops ,Narayanasamy ,liquor shops ,opening , Puducherry, Factories, Permits, Liquors Shops, Chief Minister Narayanasamy
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...