×

சிகப்பில் இருந்து ஆரஞ்சுக்கு தாவல்; நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் அரசு பஸ்கள் இயக்கப்படுமா?... பொதுமக்கள், தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

நெலலை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல இயல்புநி லைக்கு திரும்புவதால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுமா என்று பொதுமக்கள், தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். கொரோனா  தொற்று பரவலை தடுக்கும் வகையில் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

சிகப்பு மண்டலத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் (ஆரஞ்சு மண்டல) தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 18ம்தேதிக்கு பிறகு புதிதாக யாருக்கும் பாதிப்பு  ஏற்படவலில்லை. இதுபோல் நெல்லையில் ஏப். 23ம்தேதிக்கு பின்னரும் தென்காசியில் ஏப். 25க்கு பின்னரும் புதிய தொற்று ஏற்படவில்லை. இதனால்  இந்த 3 மாவட்டங்களும் சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிவிட்டன. மேலும் தற்போது இந்த 3 மாவட்டங்களும்  பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.

இதனிடையே மே 17 வரை ஊரடங்கை நீடித்து மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர பிறபகுதிகளுக்கு தளர்வுகள் அறிவிக் கப்பட்டுள்ளன. இதன்படி தனித்தனியாக உள்ள கடைகளை திறக்கவும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும், கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமென்ட் உள்ளிட்ட ஹார்டுவேர் விற்பனை கடைகள் சமூக இடைவெளியை பின்பற்றி திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற்றுக்காள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 40 நாட்களாக வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தற்போது பணிக்கு திரும்பும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்திடம்  இ- பாஸ் பெறுவதற்கான சாத்திய கூறுகள் இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருவதால் இருசக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ள அரசு பஸ்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்களில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றியும், டிரைவர், நடத்துநர் மற்றும் பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடித்து அரசு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கும் ஏதுவாக அமையும். மேலும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள், அவர்கள் பணி செய்யும் இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்ல ஏதுவாக அமையும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Orange ,Thoothukudi ,tenkasi ,Will , Paddy, Tenkasi, Tuticorin, Government buses
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...