×

தமிழகம் முழுவதும் ஏ.சி. வசதி இல்லாத நகை மற்றும் துணிக்கடைகள் இயங்க அனுமதி என தகவல்; இன்று மாலை வெளியாகும் அறிக்கை?

சென்னை : தமிழ்நாடு முழுவதும் குளிர்சாதன வசதியுடைய நகை, துணிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. ஏ.சி. வசதி இல்லாத தனியே துணிக்கடை, நகைக்கடைகள் செயல்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று அரசு அறிவித்த தளர்வு பட்டியலில் நகைக்கடை, துணிக்கடை பற்றி குறிப்பிடவில்லை. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் தமிழகத்தில் எந்த கடைகள் எல்லாம் இயங்கலாம் என தமிழக அரசு நேற்று நெறிமுறைகளை வெளியிட்டது.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாதம் 17-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து நேற்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. அதில் குறிப்பாக கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிக்குள் எந்த தளர்வும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மற்ற இடங்களில் கடைகள், தொழிற் நிறுவனங்கள் இயங்குவதற்கான நிபந்தனைகள் அதில் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த பட்டியலில் நகை கடைகள் மற்றும் துணிக்கடைகள் இடம்பெறவில்லை. இதனால் இந்த கடைகளை திறப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் உரிமையாளர்கள் இருந்தனர்.

இதுதொடர்பாக உரிமையாளர்கள் சார்பில் தமிழக அரசிடம் முறையீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது இதுதொடர்பான விரிவான விளக்கம் இன்று மாலையில் தமிழக அரசு வெளியிடும் என தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் இதுதொடர்பாக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்பது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. அதில் குளிர்சாதன வசதியுள்ள துணிக்கடைகள், நகை கடைகள் செயல்படாது என தகவல் தெரிய வந்துள்ளது. அதேபோன்று குளிர்சாதன வசதி செய்யப்படாத கடைகள் தனி கடைகளாக இருந்தால் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி மறுக்கப்படுவது ஏன்?..

கொரோனாவும், குளிர்சாதன வசதியும் ஒன்றுக்கு ஓன்று இணைவதாக உள்ளதால்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தகவல் தெரியவந்துள்ளது.  சீனாவில் குறிப்பாக வுகாண் நகரில் இருந்து இந்த கொரோனா வைரஸ் பரவினாலும் கூட இந்த வைரஸ் கட்டுப்படுத்த பின்பும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்ட 3 குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருந்தது, அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் ஏ.சி. மூலம் பரவிய நோய் தொற்றே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். எனவே தான் வணிக வளாகங்கள், மால்கள், திருமண மண்டபங்கள் போன்றவை இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, AC Facility, Jewelry and Fabrics
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...