×

அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா: டெல்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்திற்கு சீல்...யாருக்கும் அனுமதியில்லை

டெல்லி: கொரோனா எதிரொலியாக டெல்லியில் உள்ள சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அலுவலக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டடத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது. 31-வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் 135 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி மயூர் விஹார்-3 பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதிப்பு மேலும் பரவாதபடி பரிசோதனைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழலில் டெல்லி லோதி சாலையில் உள்ள 5 அடுக்கு மாடியில் இருக்கும் சிஆர்பிஎப் தலைமை அலுவலக்தில் சிறப்பு இயக்குநரின் தனி உதவியாளருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மேலும், தலைமை அலுவலகத்துக்கு பணிக்கு வரும் ஊழியர்களை அழைத்து வரும் சிஆர்பிஎப் பேருந்து ஓட்டுநருக்கும் கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த இரு ஊழியர்களும் தலைமை அலுவலகத்தில் நேரடியா அனைவருடனும் தொடர்பில் இருந்ததால் அலுவலகமே சீல் வைத்து மூடப்பட்டது.  இதுகுறித்து சிஆர்பிஎப் இயக்குநர் ஏ.பி. மகேஸ்வரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்; கொரோனா வழிமுறைகளை கண்டிப்பாக பி்ன்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரு ஊழியர்களுடன் தொடர்பி்ல் இருந்தவர்கள் அனைவரும் தேடி கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மற்றவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். அலுவலத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட இருப்பதால் தலைமை அலுவலகம் மூடி சீல்வைக்கப்பட்டுள்ளது. யாரும் செல்ல அனுமதியி்ல்லை” எனத் தெரிவித்தார். இதற்கிடையே சிஆர்பிஎப் பிரிவில் 31-வது பட்டாலியனில் கடந்த இரு வாரங்களில் இதுவரை 135 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 100 க்கும் மேற்பட்டோரின் பரிசோதனை முடிவுகள் வர இருப்பதால் பாதிப்பு அதிகரிக்குமா எனத் தெரியவில்லை. இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று இருந்துள்ளது.

Tags : headquarters ,officer ,CRPF ,Corona ,Delhi ,No one ,nobody , Office Officer, Corona, Delhi, CRPF, Head Office, Seal
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...