×

அதிகாரியாக இருந்தாலும் மாஸ்க் அணிய வேண்டும்; நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் இருக்கக்கூடாது...சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, அவர்  கூறுகையில்,

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்.
* வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடக்கிறது.
* கொரோனா அறிகுறி உள்ளதா என சென்னையில் வீடு வீடாக ஆய்வு நடத்தப்படுகிறது.
* வீட்டையும், சுற்றுப் பகுதிகளையும் மக்கள் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

* பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
* மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.
* மாஸ்க் இல்லையெனில் துணியை முகக்கவசம் போல் பயன்படுத்தலாம்.
* நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது.

* அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பேசும்போது கூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
* நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
* தன்னார்வலர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

* சீல் வைக்கப்படாத பகுதியில் கொரோனா தொற்று காரணம் குறித்து தீவிரமாக ஆய்வு.
* வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்.
* கொரோனா அதிகரிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை.
* கடைகளில் பணியாற்றுபவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு.

* வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை.
* கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
* அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டம்.
* சென்னை வி.ஆர்.பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
* சென்னையில் மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும்

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி:

* தனிக்கடைகள் பட்டியலில் டீக்கடைகள், பேன்சி கடைகள் ஆகியவை இடம்பெறாது.
* சென்னை மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாஸ் வழங்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது.
* வெளிமாவட்டங்கள் செல்ல http://tnepass.tnega.org மூலம் பாஸ் பெறலாம்.
* சென்னை மாநகராட்சியில் பாஸ் பெறுவது பற்றி இன்று விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்.
* வீட்டுவேலைப் பணியாளர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் பாஸ் வாங்கிக் கொடுக்கலாம்.

Tags : Radhakrishnan , Wear mask, though official; Let us not be indifferent to the corona ... Interview with Special Officer Radhakrishnan
× RELATED திருத்தங்கல்லில் சாலையின் நடுவே...