×

மடத்துக்குளம் அருகே பால் வேனில் கடத்தப்பட்ட 2 டன் இறைச்சி பறிமுதல்

உடுமலை: மடத்துக்குளம் அருகே பால் வேனில் கடத்தப்பட்ட 2 டன் இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கொரோனா  வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில்  உள்ளது. அத்துமீறி வாகனங்கள் செல்வதை போலீசார் கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு 11  மணிக்கு பழனியில் இருந்து பால் வேன் ஒன்று, சோதனைச்சாவடி அருகே வந்தது. அப்போது,  எஸ்.ஐ. பொருட்செல்வன், ஏட்டு ராஜேந்திரன் ஆகியோர் வேனை சோதனை செய்தனர்.  அப்போது பால் வேனில் 2 டன் அளவுக்கு இறைச்சிகள் இருந்தது தெரியவந்தது. ரூ.3  லட்சம் மதிப்புள்ள இந்த இறைச்சிகளை கோவைக்கு கடத்தி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வேன் ஓட்டுநர் அகஸ்தீஸ்வரன் (45)  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் மடத்துக்குளம்  வட்டாட்சியர் கனிமொழி, பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி, வருவாய்த்துறை  ஆய்வாளர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன், தனிப்பிரிவு போலீஸார்  சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், வடக்கு கண்ணாடிபுதூர் பகுதியில்  ஓரிடத்தில், பொக்லைன் மூலம் 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டி இறைச்சிகள்  புதைக்கப்பட்டன. 50 கிலோ அளவுக்கு பிளீச்சிங் பவுடரும் பயன்படுத்தப்பட்டது.

Tags : milk van ,Madathukulam 2 ,Madathukulam , 2 tons , meat seized , milk van , Madathukulam
× RELATED மடத்துக்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை