×

கிரீன் கார்டு விண்ணப்பித்தோருக்கு ஆவணங்களை தர 60 நாள் அவகாசம்

வாஷிங்டன்: எச்1பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க 60 நாள் அவகாசத்தை அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டவர்களை பணியமர்த்த எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெரும்பாலும் இந்திய ஐடி துறையினரும், சீன நாட்டினரும் பெற்று வருகின்றனர். இதேபோல, குறிப்பிட்ட காலம் வரை அமெரிக்காவில் தங்கி பணியாற்றிய பிறகு, நிரந்தர குடியுரிமை பெற கிரீன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது. உலகிலேயே அதிகபட்சமாக அங்கு 65,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு காரணமாக, எச்1பி விசா வைத்திருப்பவர்களும், கிரீன் கார்டு விண்ணப்பம் செய்தவர்களும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக அமெரிக்க குடியேற்றத்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : applicants , Green Card, Application, Documents, Corona, Curfew
× RELATED பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை 1,249 பேர் எழுதினர்