×

அவுக எதார்த்தமா வெளியேற இவுக பதார்த்தமா உள்ளே வர....வசமாக சிக்கியது கள்ளக்காதல் ஜோடி

திருவனந்தபுரம்: கேரளாவில்  லாக்-டவுன் நேரத்தில் பல மாவட்டங்களை கடந்து காரில் சென்று  கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து வந்த மார்க்சிஸ்ட் பிரமுகரான வக்கீலை போலீசார் பொறிவைத்து  பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம்  திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல கிரிமினல் வக்கீல் ஒருவர், மார்க்சிஸ்ட் பிரமுகராகவும் உள்ளார். இவர் பார் அசோசியேஷனில்  முக்கிய பொறுப்பிலும் உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.  இவருக்கு, கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள்  உள்ள ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில்  வக்கீலுக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு இருவரும்  அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில்,  லாக்-டவுன் அமலுக்கு வந்ததால் கள்ளக்காதலர்களால் சந்திக்க முடியாதநிலை  ஏற்பட்டது.

ஆனாலும் கணவன் இல்லாத நேரத்தில், அந்த இளம்பெண் வக்கீலை தொடர்பு  ெகாண்டு தனது வீட்டுக்கே அழைத்து, இருவரும் உல்லாசமாக இருந்து  வந்துள்ளனர். வழியில் போலீசார் கேட்கும்போதெல்லாம் ‘வழக்கு விஷயமாக கொல்லம் பார்  அசோஸியேஷன் செல்கிறேன்’ என கூறி தப்பித்து சென்றுள்ளார். வக்கீலின் நடவடிக்கைகளை கவனித்த அப்பகுதியினர் கொல்லம்  மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரிக்க கலெக்டர்  போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி அந்த வக்கீலை  பொறிவைத்து பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே அந்த  இளம்பெண்ணின் கணவரின் உறவினர் ஒருவர் கோட்டயத்தில் திடீரென மரணமடைந்தார்.  இதையடுத்து இறுதிச்சடங்கில் பங்கேற்க இளம்பெண்ணின் கணவர் புறப்பட்டு  சென்றார்.  அந்த இளம்பெண்ணின் கணவரை 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு  சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

இதனால் அவர் சாத்தனூருக்கு திரும்ப  முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த இளம்பெண், உடனடியாக  போன் செய்து வக்கீலிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து வக்கீல்  2 நாட்களுக்கு முன் மாலை அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்தார்.  ஆனால் அங்கு கண்காணிப்பில் இருந்த போலீசார், காரில் வந்த வக்கீலை மடக்கி  பிடித்து, கள்ளக்காதலி வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையில் இருக்க வலியுறுத்தினர்.

இதனால் வசமாக மாட்டிக்கொண்ட வக்கீல் அதிர்ச்சியில் செய்வதறியாது உறைந்தார். மேலும் அவர்  தப்பித்து செல்ல வாய்ப்பு உள்ளதால் இரவிலும் தீவிரமாக கண்காணிக்கும்படி  அருகில் உள்ள வீட்டினரிடம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து  கழுகுக்கண்கள் பார்வையில் இருந்து தப்பிக்க வழியின்றி, அந்த வக்கீல்  கள்ளக்காதலி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இதற்கிடையே கணவர் திடீரென  வீட்டுக்கு வந்தால் என்ன சொல்வது என தெரியாமல் அந்த இளம்பெண்ணும்  தவித்து வருகிறார்.

Tags : exit , Counterfeit couple, corona, curfew
× RELATED பிப்ரவரி 2ல் ரிலீசாகிறது ஹாரர் கதை எக்ஸிட்