×

ஐந்து மண்டலங்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

* குணமடைந்தவர்கள்   எண்ணிக்கை 219,   இறப்பு 16
* மாநகராட்சி அறிவிப்பு

சென்னை:  சென்னையில்  கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை  தாண்டியுள்ளது. ஐந்து மண்டலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம்  சென்னையில் 176 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் தற்போது வரை 1082   பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது.மேலும் நேற்று காலை 8மணி நிலவரப்படி சென்னை மண்டலம் வாரியாக பார்க்கும் போது அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 259 பேருக்கும், ராயபுரத்தில் 216 பேரும்,  பேரும்,  தேனாம்பேட்டையில் 132 பேரும்,  கோடம்பாக்கத்தில் 116 பேரும், தண்டையார்பேட்டையில் 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அண்ணாநகரில் 91 பேருக்கும், வளசரவாக்கத்தில் 60 பேருக்கும், அம்பத்தூரில் 33 பேருக்கும், அடையாரில் 21 பேருக்கும், திருவொற்றியூர் 19 பேருக்கும், ஆலந்தூர் மற்றும் பெருங்குடியில் 9 பேர், மாதவரத்தில் 4 பேருக்கும், மணலி மற்றும் சோழிங்கநல்லூரில்  3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஆண்கள் 63 சதவீதம் பேர் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

முதியவர்களை விட இளைஞர்கள் அதிகம்
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் வயது  வாரியான விவரங்கள். அதன்படி 9  வயதுக்குட்பட்ட குழந்தைகள் 34 பேரும், 10-19 வயதுக்குட்பட்டகள் 109 பேரும்,  20-29 வயதுக்குட்பட்டவர்கள் 242 பேரும்,  30-39 வயதுக்குட்பட்டவர்கள் 237  பேரும், 40-49 வயதுக்குட்பட்டவர்கள் 195 பேரும்,  50-59  வயதுக்குட்பட்டவர்கள் 137 பேரும், 60-69 வயதுக்குட்பட்டவர்கள் 81 பேரும்,  70-79 வயதுக்குட்பட்டவர்கள் 28 பேரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13 பேர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : zones ,Chennai , Five Zones, Madras. Corona, curfew
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...