×

சில்லி பாயிண்ட்…

* இளம் வீரர்களுக்கு உதவ டோனி எப்போதுமே தயாராக இருப்பார். ஆனால், பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வை அவர் ஒருபோதும் கூற மாட்டார். நாங்களாகவே அதைத் தேடிக் கண்டுபிடிக்க ஊக்குவிப்பார். இதனால் முழுமையாக அவரைச் சார்ந்து இல்லாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க கற்றுக் கொண்டேன்… என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
* கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும், 2032ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான முன்முயற்சிகளை எடுப்போம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா கூறியுள்ளார்.
* வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் பிரையன் லாரா நேற்று தனது 51வது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார்.
* கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளை நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.



Tags : Dhoni , Dhoni , young players
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...