×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதமாக மழை இல்லாததாலும், கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 150 கன அடிக்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 27ம் தேதி விநாடிக்கு 350 கன அடியாக இருந்த நீர்வரத்து, மறுநாள் 1000 கன அடியாக அதிகரித்தது.

இதையடுத்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் 2,300 கனஅடியாக நேற்று முன்தினமும் நேற்றும் நீடிக்கிறது.  அதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 433 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 957 கன அடியானது. குடிநீருக்காக 750 கன அடிதிறந்து விடப்படுகிறது. நீர்மட்டம் 100.01 அடியாகவும் நீர்இருப்பு 64.85 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Rainwater harvesting ,catchment area ,harvesting , Water catchment area, rainfall, Mettur Dam, increase in water quality
× RELATED மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி