×

சென்னை மாநகராட்சி முகாம்களில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் குறித்த விவரம் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பு

சென்னை:  கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ம் ேததி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு மாநிலத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் மாநகராட்சி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நாடு தழுவிய ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்துள்ள மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சி நிவாரண முகாம்களில் தங்கியுள்ள 2,484 வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டது. இதனை வைத்து எந்ெதந்த மாநில தொழிலாளர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று அறிக்கை தயாரித்த மாநகராட்சி அதை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்ததெந்த மாநிலங்கள் ஒப்புதல் அளித்தவுடன் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படு
வார்கள்.

முகாம்களில் இல்லாமல் வெளியில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களையும் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி முகாம்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் தகவல் மட்டுமே மாநகராட்சியிடம் உள்ளது. இதை தவிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் சொந்த மாநிலங்களில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு அல்லது இதற்காக அந்த மாநிலங்கள் உருவாக்கி உள்ள இணையதளத்தில் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அந்த தகவல்களை தமிழக அரசிடம் தெரிவித்தால் அவர்கள் ெசாந்த மாநிலத்துக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Northern Territory Workers ,States ,Madras Corporation Camps , Chennai Corporation, Northern Territory Workers, Corona, Curfew
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்