×

ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம்

சென்னை:  அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய ஊதியத்தை நிறுத்தி வைக்காமல் மே மாதமே வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில்  15,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ஊதியம் 7700 வழங்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை மாதமான மே மாதம் மட்டும் ஊதியம் வழங்குவதில்லை. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட பகுதிநேர  ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வழங்க வேண்டிய ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் மே மாதமே வழங்க வேண்டும்.
 
அதேபோல அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 3600 கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 15 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த தொகுப்பு ஊதியம் ஆண்டு ஒன்றுக்கு 10 மாதங்கள் மட்டுமே வழங்கப்படும். ஏப்ரல், மே மாதங்களில் வழங்குவதில்லை. அந்த இரண்டு மாத ஊதியம் ஜூலை மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்குவது வழக்கமாக உள்ளது. தற்போது கொரோனா தடுப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மேற்கண்ட கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பு ஊதியம் பெறாமல் முடங்கியுள்ளனர். அதனால் அவர்களுக்கான ஏப்ரல், மே மாத ஊதியங்களை நிறுத்தி வைக்காமல் உடனடியாக வழங்க முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது.

Tags : Teachers , Federation of Teachers, Teachers, Salaries
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...