×

ஒன்றிணைவோம் வா செயல் திட்டம் மூலம்: 10 மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஒன்றிணைவோம் வா செயல் திட்டம் மூலம் 10 மாவட்ட நிர்வாகிகளுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சில் ஆலோசனைகள் வழங்கினார்.  திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, திருப்பூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோரிடம் காணொலி மூலமாக விசாரித்தறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.  

பின்னர் மாலையில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக ஒன்றிய, நகர மற்றும் பகுதிச் செயலாளர்களிடம் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..



Tags : MK Stalin ,district administrators ,consultation , MK Stalin, Corona, Curfew
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...