×

மாநகராட்சி மூலம் கிருமி நாசினி வழங்க உத்தரவு: வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க வேண்டும்

* பொதுமக்களுக்கு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை: மாநகராட்சி மூலம் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர்களை வழங்கவும், பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தி வீட்டினையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:  தமிழக அரசின் சார்பில் சென்னை மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வருவாய் நிர்வாக ஆணையர்  ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர், நேற்று கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ்அவுஸ் வி.ஆர். பிள்ளை தெரு, முனுசாமிபுரம் போன்ற பகுதிகளை பார்வையிட்டார். பின்பு அங்கு பணியாற்றி வரும் காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகள், கடைமடை ஊழியர்கள் போன்றவர்களிடம் ெகாரோனா தடுப்பு பணிகளை மேலும் ஊக்குவித்து ஆலோசனை வழங்கினார்.

மேலும், அந்த பகுதி மக்களிடம் நோய் பரவாமல் இருக்க சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் வடசென்னை, சூளை பகுதியிலுள்ள தட்டாங்குளம், போதிலால் தெரு மற்றும் பட்டாளம் மார்க்கெட் போன்ற நோய் அதிகம் காணப்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கண்டிப்பாக வெளியில் வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் மாநகராட்சி மூலம் 250 கிராம், 500 கிராம் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர்களை வழங்கும்படி உத்தரவிட்டார். இந்த பிளீச்சிங் பவுடரை தங்களின் வீட்டிற்கு பயன்படுத்தி வீட்டினையும், சுற்றுப்புறத்தினையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கபசுர குடிநீர் அந்த பகுதி மக்களுக்கு வழங்கவும் சித்த மருத்துவர்களை கேட்டுக் கொண்டார். அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மண்டல சிறப்பு அதிகாரி அருண் தம்புராஜ், அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் உடனிருந்தனர்.

Tags : house ,The Corporation ,Surroundings , Corporation, Antiseptic, Corona, Radhakrishnan, Curfew
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்