×

சென்னை மாநகராட்சியில் 33,84,800 முகக்கவசங்கள் 4,27,700 கையுறை கொள்முதல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 33,84,800 முகக்கவசங்கள், 4,27,700 கையுறைகள் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 21,49,850 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு ப ணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தினமும் பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசங்கள், கையுறைகள், ஒளிரும் ஆடைகள், பாதுகாப்பு உடைகள் மற்றும் கிருமிநாசினி திரவம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசங்கள் 33,84,800, கையுறைகள் 4,27,700 கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து மண்டலங்களிலும் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான எண்ணிக்கையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மண்டல அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 21,49,850 முகக்கவசங்கள் 1,01,100 பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டு முறையாக உரிய பதிவேடுகளில் பராமரிக்கப்படுகிறது.

மேலும் தூய்மை பணியாளர்கள் பணி முடிந்ததும் சோப்பு மூலம் கை கழுவுவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. அவர்கள் பணிக்கு வருவதற்கு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் 100 பேருந்துகள் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : corporation ,Chennai , Chennai Corporation, Facial Tresses, Gloves, Corona
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...