×

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் சம்பளம் போட்டாச்சா..?கல்வித்துறை கேள்வி

சென்னை:   கொரோனா பாதிப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்காமல் பாதி ஊதியம் வழங்கி வருவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.  இதன்பேரில், தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து தகவல்கள் பெற்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 2 நாளில் இதற்கான அறிக்கை தனியார் பள்ளிகள் இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags : private school teachers , Private School Teachers, Department of Education, Corona
× RELATED தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்