×

மதுப்பிரியர்களை மகிழ்விக்க மதுக்கடைகளை திறக்கும் கர்நாடகா; நோய் கட்டுப்பாட்டு இல்லாத பகுதிகளில் மட்டும் திறக்க அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் நோய் கட்டுப்பாட்டு இல்லாத பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவில் திங்கள் முதல் மதுக்கடைகளை திறக்கலாம்; பார்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 37 ஆயிரத்து 776 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவியவர்களில் ஆயிரத்து 18 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 223 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் மதுக்கடைகளை மே 4-ம் தேதி முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சிவப்பு மண்டல பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் திறக்கலாம். மதுப்பிரியர்கள் 3 அடி சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து மது வாங்கி செல்ல வேண்டும். மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்களுக்கு அனுமதியில்லை என அம்மாநில கலாத்துறை மந்திரி நாகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka ,areas , Permits, Bartenders, Karnataka, Permits
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!