×

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேர்வான 260 புதிய பெண்காவலர்களுக்கு நாளை பயிற்சி துவக்கம்: ஆயுதப்படை வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் புதியதாக தேர்வான பெண் காவலர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்புடன் பயிற்சி தொடங்குகிறது. இதற்காக பாளை ஆயுதப்படை மைதானம் மற்றும் வளாக கட்டிடங்களில் இன்று கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. 2019ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, அடிப்படை பயிற்சிக்கு தகுதி பெற்ற நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பெண் காவலர்கள் நாளை காலை 8 மணிக்கு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் அனைத்து அசல் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை,

பாஸ்போர்ட் அளவு போட்டோ உள்ளிட்டவைகளுடன் கட்டாயமாக ஆஜராகவேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு அனைவருக்கும் நாளை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் சாதுசிதம்பரம், சப்-இன்ஸ்பெக்டர் பழனி, மாநகராட்சி பாளை மண்டல உதவி ஆணையர் பிரேம்ஆனந்த், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆயுதப்படை வளாக மைதானம், சுற்றி உள்ள அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.


Tags : recruits ,districts ,women recruits , Paddy, Tenkasi, Female, Training Initiative
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை