×

கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து தற்போது திருவான்மியூர்; காய்கறி விற்று வந்த வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை திருவான்மியூரில் காய்கறி விற்று வந்த அடையாரைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகளை வாங்கி விற்பனை செய்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை 2526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அதிக அளவாக 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மற்றும் பழ மார்க்கெட்டில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்றவர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள காய்கறி சந்தையில் 63 வயதுடைய வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் இவர் கோயம்பேடு சந்தையிலிருந்து பொருட்களை எடுத்து வருவது வழக்கம்.கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் பலருக்கு கொரோனா பரவியுள்ள நிலையில் இவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா உறுதி செய்யப்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கடந்த நாட்களில் இவர் சென்று வந்த இடங்கள் இவருடன் தொடர்பில் இருந்த நபர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் தனிமை படுத்தி வருகின்றனர்.


Tags : Thiruvanmiyur ,Coimbatore ,Corona ,vegetable vendor , Coimbatore Market, Thiruvanmiyur, Vegetable, Corona
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!