×

திருவில்லி. அருகே சூறைக்காற்றுடன் பின்னி எடுத்தது மழை 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் 3 ஆயிரம் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்தன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே நேற்று முன்தினம் ஒன்றரை மணிநேரம் நகர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அத்துடன் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசியது. திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் மலையடிவாரப் பகுதியில் அடித்த சூறவாளி காற்றால் சுமார் 3 ஆயிரம் வாழை மரங்கள் தாரோடு பெயர்ந்து விழுந்தன.

மம்சாபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் தோட்டத்தில் 2 ஆயிரம், அதிபதியை சேர்ந்த முருகன் தோட்டத்தில் ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. குறிப்பாக தாரோடு உள்ள வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் வாழைக்காய், வாழைப்பூ, வாழைப்பழங்களை விற்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். தற்போது சூறாவளி காற்றால் வாழை மரங்கள் விழுந்ததால் மிகவும் கவலை அடைந்துள்ளனர். வாழை விவசாயி பொன்னுத்தாய் கூறுகையில், ``கடனை வாங்கி தான் விவசாயம் செய்தோம். தற்போது மேலும் கடன் சுமை எங்கள் மேல் விழுந்துள்ளது. எப்படி இதிலிருந்து மீள்வது என தெரியவில்லை. எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல் மம்சாபுரம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கரும்பும் சூறாவளி காற்றில் பல்வேறு பகுதியில் சாய்ந்து விழுந்தன.



Tags : Tiruvilli ,storm , Tiruvilli. Nearly ,3 thousand banana trees , damaged by the storm
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...