×

கொரோனாவை பிற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யும் கோயம்பேடு மார்க்கெட்: சொந்த ஊர் திரும்பிய வியாபாரிகள், தொழிலாளர்கள் பலருக்கு தொற்று உறுதி

சென்னை : கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக கோயம்பேடு மார்க்கெட் மாறியுள்ளது சென்னை வாழ் மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து சொந்த ஊர் திரும்பிய  வியாபாரிகள், தொழிலாளர்கள்,  காவல்துறையினர் என சுமார் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து அரியலூர் திரும்பிய 19 பேருக்கும், கடலூர் திரும்பிய 7 பேருக்கும், பெரம்பலூர் சென்ற ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான விழுப்புரம் வந்த 2 வியாபாரிகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றி விட்டு, யாரெல்லாம் வீடு திரும்பியுள்ளார்களோ, அவர்கள் அனைவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

Tags : districts ,hometown traders ,Corona Market ,many , Corona, Center Point, Coimbatore, Market, Hometown, Merchants, Workers, Infection, Confirmation
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...