×

ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காவல்துறையின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1,24,761. இவற்றில் 14,975 பணியிடங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி காலியாக உள்ளன. இவற்றில் 90 விழுக்காடு காவலர் பணியிடங்கள் ஆகும். கொரோனா தடுப்புப் பணிக்கு போதிய காவலர்கள் இல்லாத நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்த 8500 காவலர்கள் பயிற்சி முடியும் முன்பே பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டாலும் கூட, 700 பேருக்கு ஒரு காவலர்தான் இருப்பார் என்பதாலும், காவல்துறைக்கான பணிச்சுமை அதிகரித்திருப்பதாலும் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல. இத்தகைய சூழலில் ஊர்க்காவல் படையினரை காவலர்களாக நியமிக்கலாம்.

தமிழக காவல்துறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு இளைஞர் காவல் படை என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அந்த பிரிவில் இருந்தவர்கள் குறிப்பிட்ட கால பணிக்கு பிறகு காவல்துறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். தமிழ்நாடு இளைஞர் காவல் படையில் இருந்தவர்களை விட ஊர்க்காவல் படையில் இருப்பவர்களுக்கு அனுபவம் அதிகம். ஆகவே, ஊர்க்காவல் படையினரில் தகுதியும், திறமையும் உள்ளவர்களை தமிழ்நாடு காவல்துறையில் சேர்க்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : Anhumani ,Anbumani , Guards, Police, Anumani
× RELATED இந்தியில் ஒட்டுவேட்டை நடத்தும் பாமக...