×

ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.  இதனால் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2016-17ல் இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, ஒரே ஒரு தோல்வியை சந்தித்திருந்தது. விதிமுறைகளின்படி இந்த சிறப்பான செயல்பாடு தற்போதைய தரவரிசைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

டாப் 10 அணிகள்
ரேங்க்    அணி    புள்ளி
1    ஆஸ்திரேலியா    116
2    நியூசிலாந்து    115
3    இந்தியா    114
4    இங்கிலாந்து    105
5    இலங்கை    91
6    தென் ஆப்ரிக்கா    90
7    பாகிஸ்தான்    86
8    வெஸ்ட் இண்டீஸ்    79
9    ஆப்கானிஸ்தான்    57
10    வங்கதேசம்    55


Tags : Australia , ICC Test Rankings, Australia
× RELATED வந்தே பாரத் திட்டத்தில்...