×

மாலத்தீவில் தவிக்கும் 29,000 இந்தியருக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி வழக்கு: மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஹூபர்ட்சன் தாக்கல் செய்த மனுவில், மாலத்தீவில் டாக்டர்கள், பொறியாளர்கள், கட்டிட பணியாளர்கள், ஆசிரியர்கள், நர்சுகள் என பல்வேறு பணிகளுக்கு இந்தியாவிலிருந்து 29 ஆயிரம் பேர் சென்றுள்ளனர். இவர்களில் சுற்றுலா விசாவில் சென்றவர்களும் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு  பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்தவர்கள் உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி எதுவும் இல்லாமல் திணறுகிறார்கள். அவர்களால் இந்தியாவுக்கும் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் செய்து தரவும், பத்திரமாக இந்தியாவிக்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், மாலத்தீவுக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாலத்தீவில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்தல் மற்றும் அவர்களை இந்தியா அழைத்துவரும் நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Tags : Indians ,facilities ,Maldives , Maldives, India, the Central Government, HC
× RELATED அடிப்படை வசதிகள் இல்லாத இருளர்...