×

பக்தர்கள் அனுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் நடவடிக்கை தேவஸ்தான ஒப்பந்த ஊழியர் 1,400 பேர் பணி நீக்கம்: கொரோனா வைரஸ் எதிரொலி

திருமலை: கொரோனா வைரஸ் காரணமாக திருப்பதி கோயிலில் பக்தர்கள் அனுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தேவஸ்தானத்தில் பணியாற்றிய 1,400 ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் அதிரடி பணிநீக்கம் செய்யப்பட்டனர்.  கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி முதல் ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இதர கோயில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு நடைபெறும் நித்திய பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடந்து வருகிறது. இந்நிலையில்  திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான பக்தர்கள் ஓய்வறைகளில் தூய்மை பணிகளை செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களின் சார்பில் ஒப்பந்த முறையில் 1,400 துப்புரவு தொழிலாளர்கள் தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வந்தனர்.

கொரோனா காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த தூய்மை தொழிலாளார்களுக்கு எந்த வேலையும்  இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் மூலம் தேவஸ்தான நிர்வாகம் 1,400 தொழிலாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அறைகள் ஒதுக்கீடு செய்யாமல் நேரடியாக  10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டும் தினந்தோறும் நேரடியாக சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், தூய்மை தொழிலாளர்களுக்கான வேலை மிகவும் குறைவாக இருக்கும்.  இதன் காரணமாக தற்போது 1,400 தூய்மை தொழிலாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
இதனால் வேதனை அடைந்த ஒப்பந்த தூய்மை  தொழிலாளர்கள் நேற்று திருப்பதி விஷ்ணு நிவாசம் தேவஸ்தான ஓய்வறை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த எம்எல்ஏ கருணாகரரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்ட பொதுச்செயலாளர் முரளி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்தாலும் மீண்டும் வேறு எந்த நிறுவனம் வந்தாலும் தொழிலாளர்களாக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.

புதிதாக வேறு யாரும் பணி அமர்த்தப்பட மாட்டார்கள். எனவே பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட அனைவருக்கும் எந்த நிறுவனம் மீண்டும் ஒப்பந்தம் எடுத்தாலும் அதில் நீங்கள் பணி அமர்த்தப்படுவீர்கள்.  உங்கள் வேலைக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம் என்றனர். மே 1 தொழிலாளர் தினம் கடைப்பிடிக்கக் கூடிய இந்த நாளில் 1,400 தொழிலாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டது தொழிலாளர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.


Tags : Deportation ,pilgrims ,Pilgrimage , Corona virus, Devastana contract worker, Tirupati temple
× RELATED ராகுல்காந்தி யாத்திரை நிறைவு...