×

திருவனந்தபுரம் அருகே ஊரடங்கு விதிகளை மீறியதாக காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏ மீது வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  அருகே ஊரடங்கை மீறியதாக காங்கிரஸ் எம்பி அடூர் பிரகாஷ் மற்றும் எம்எல்ஏ சபரி நாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள  மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றிங்கல் தொகுதி காங்கிரஸ் எம்பியாக  இருந்து வருபவர் அடூர் பிரகாஷ். நேற்று முன்தினம் இவர் நெடுமங்காடு பகுதியில்  காங்கிரஸ் வக்கீல்கள் சங்கம் சார்பில்  நடந்த குமஸ்தாக்களின்  குடும்பத்தினருக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார்.நெடுமங்காடு குற்றவியல் முதன்மை நீதிமன்ற வளாகத்தில்  நடந்த இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக  தெரிவிகிறது. இதையடுத்து அடூர் பிரகாஷ் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  50க்கும் மேற்பட்டோர் மீது நெடுமங்காடு போலீசார், தொற்றுநோய் பரவல்  தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்குப்பதிவு செய்துள்ளனர்.

எம்எல்ஏ மீது வழக்கு: கடந்த  2 தினங்களுக்கு முன்பு அருவிக்கரை அருகே கலால்துறை அதிகாரிகளை கண்டு  பயந்து ஓடிய ராஜேந்திரன் என்பவர் கால்வாயில் விழுந்து இறந்தார். அவரது  உடலுடன் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் கலால்துறை அலுவலகம் முன் போராட்டம்  நடத்தினர். இது தொடர்பாக அருவிக்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சபரிநாதன்  உட்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரசார்  மீது போலீசார் திட்டமிட்டு வழக்குப்பதிவு ெசய்வதாகவும், கடந்த சில  தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவர்கள் ஏராளமாேனார்  கலந்து ெகாண்ட நிகழ்ச்சியை நடத்திய அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மீது  வழக்குப்பதிவு செய்யாதது ஏன் எனவும் காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசின்  இந்த செயலை கண்டித்து திருவனந்தபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  காங்கிரசார் போராட்டங்களையும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : MLA ,Congress ,Trivandrum Trivandrum , Thiruvananthapuram, Curfew rules, Congress MP, MLA, case
× RELATED ம.பி.யில் மாநிலங்களவை தேர்தல் :...