×

முதல்வர் நிவாரண நிதிக்கு 2 மாத ஓய்வூதியம் தந்த மூதாட்டி

திருவனந்தபுரம்: மத்திய அரசின் ‘நாரி சக்தி’ விருது பெற்ற கார்த்தியாயினி அம்மா முதல்வரின் நிவாரண நிதிக்காக தனது 2 மாத ஓய்வூதியத்தை வழங்கியுள்ளார். கேரள  மாநிலம் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு பகுதியைச்  சேர்ந்தவர் கார்த்தியாயினி  அம்மா(98). இளமையில் வறுமையால்  பள்ளிக்கு  செல்லவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி  செல்லாதவர்களுக்கு  எழுத்தறிவு திட்டத்தை ேகரள அரசு ெகாண்டு வந்தது. இதில் கடந்த 2  ஆண்டுகளுக்கு  முன்பு, தனது 96 வயதில் கார்த்தியாயினி அம்மா சேர்ந்து  படித்தார். அதில் நடந்த தேர்வில்  கார்த்தியாயினி அம்மா 100க்கு 98  மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

இதையடுத்து, கேரள எழுத்தறிவு திட்டத்தின் நல்லெண்ண  தூதராகவும் அவர்  நியமிக்கப்பட்டார். மத்திய அரசும்   சிறந்த பெண்மணிக்கான ‘நாரி சக்தி’ விருதை கார்த்தியாயினிக்கு  வழங்கியது. இந்த நிலையில் தனது 2 மாத  முதியோர் ஓய்வூதியத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு  வழங்குவதாக  கார்த்தியாயினி அம்மா அறிவித்தார். இதையடுத்து கேரள உள்ளாட்சித்துறை  அமைச்சர் மொய்தீன், கார்த்தியாயினி அம்மா  வீட்டுக்கு சென்று, ஓய்வூதிய தொகை ரூ3,000 ஐ பெற்றுக்கொண்டார்.


Tags : Muthathi , Corona, Curfew, Chief Minister Relief Fund, Pensioner, Grandfather
× RELATED கன்னியாகுமரியில் மூதாட்டி கொலை...