×

சமூக இடைவெளியை கடைபிடிக்காத பிரபல உணவகங்களுக்கு சீல்

பெரம்பூர்: திருவிக  நகர் மண்டலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பிரபல பன்னாட்டு ரெஸ்டாரன்ட் உள்ளிட்ட உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவிக நகர் மண்டலம் சென்னையிலேயே கொரோனா பாதித்தவர்கள் அதிகம்  உள்ள பகுதியாக மாறியுள்ளது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திருவிக நகர் மண்டலத்திற்கு கூடுதல் அதிகாரிகளை நியமித்து அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி மண்டலம் அதிகாரி நாராயணன் உத்தரவின்பேரில் உதவி வருவாய் அலுவலர் லட்சுமண குமார் மற்றும் உரிமம் ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

 அப்போது, பெரவள்ளூர்  70 அடி ரோடு சிவ இளங்கோ சாலை பகுதியில் இயங்கி வரும் பிரபல பன்னாட்டு ரெஸ்டாரண்ட்டில் சமூக இடைவெளி இல்லாமல் 30க்கும் மேற்பட்ட உணவு டெலிவரி ஊழியர்கள் குவிந்து இருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து அந்த ரெஸ்டாரண்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.  இதேபோல், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு பகுதியில் இயங்கிவரும் 2 பிரியாணி கடை மற்றும் 2 துரித உணவகங்கள், புரசைவாக்கம்  கரியப்பா ரோடு பகுதியில் இயங்கிவரும் ஆயில்  கடை ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்துார் பிள்ளையார் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படுவதாகவும், அங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பணியில் ஈடுபடுவதாகவும் அனகாபுத்துார் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசருக்கு புகார் வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரடங்கு உத்தரவை மீறி நிறுவனம் இயங்குவது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.



Tags : restaurants ,restaurant , Social space, popular restaurants, sealed
× RELATED செயின் பறிக்க முயன்ற ரவுடி கைது