×

துவணி அறக்கட்டளை சார்பில் 9,000 கால்நடைகள் பிராணிகளுக்கு உணவு

சென்னை: கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சாலையோரம் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகள், பூனைகள் மற்றும் குரங்குகள் போன்றவை உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன. எனவே விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும்   வழக்கறிஞரும்,  விலங்குகள் வதைத்தடுப்பு அமைப்பின் துணைத் தலைவருமான அனுஷா  செல்வத்தினால் தொடங்கப்பட்ட துவணி அறக்கட்டளை சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சுற்றித்திரியும் மாடுகள், பூனைகள், நாய்கள் மற்றும் குரங்குகளுக்கு தினமும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனரும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு பொறுப்பாளருமான ஜே.நவநீதகிருஷ்ணன் மூலமாக வழங்கப்படுகிறது. துவணி அறக்கட்டளை சார்பில் 1000 கிலோ அரிசி  வழங்கப்பட்டு, இதன் மூலமாக சுமார் 9000 கால்நடைகள், பிராணிகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அரிசி உணவை தவிர 300 பாக்கெட் பிரட், பிஸ்கட்களும் கொடுக்கப்பட்டுள்ளது.



Tags : Startup Foundation, Livestock Pets, Food
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...