×

மணல் திருட்டு: ஒருவர் கைது

பொன்னேரி: பொன்னேரி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆற்றங்கரையில் மணல் திருட்டு நடப்பதாககவும், சிறு, சிறு மூட்டைகளாக மணலை கட்டி விற்பனை செய்வதாகவும் பொன்னேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக, லட்சுமிபுரம் காலனி பகுதியை சேர்ந்த பழனி (48) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் பழனியை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Sand Theft, One Arrested
× RELATED மணல் திருட்டை தடுக்க சென்ற காவலர்கள்...