×

கபசுர குடிநீர்பற்றி விளக்கி சொன்ன ஐ.ஏ.எஸ். அதிகாரி: மத்திய குழுவினர் ஆச்சர்யத்தில் மூழ்கினர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், மத்திய அரசின் தேசியப் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் செயலாளர்  திருப்புகழ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் தமிழகத்துக்கு  வந்தனர்.    கடந்த 29ம் தேதி மத்திய குழுவினர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி சென்றனர். அப்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர் எந்த அளவுக்கு முக்கியமாக செயல்படுகிறது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர் கணேஷ் மத்திய குழுவினரிடம் விளக்கி கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது, மத்திய குழுவினர், கபசுர குடிநீரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு அவர், யூகி வைத்திய சிந்தாமணி எனும் நூலில் இடம்பெற்ற ஒரு பாடலை மேற்கோள்காட்டி கூறியுள்ளார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் கேட்டுள்ளனர். பொதுவான நோய் அறிகுறிகளுடன் `சுவை தெரியாது’ என்கிற வார்த்தையும் இருப்பதாக கூறியுள்ளார். இதை அவர்கள் ஆச்சர்யமாக கேட்டுள்ளனர். இதே அறிகுறியை அமெரிக்க நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, அதை ஆராய்ச்சி செய்து சித்தர் ஒருவர் எழுதியிருக்கிறாரா, அந்தப் பாடலை உங்களது வெப்சைட்டில் போட்டு பிரபலமாக்கலாமே என்றாராம்.

டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் திருநெல்வேலி மாவட்டம், ஈரோடு மாவட்டம் ஆகிய ஊர்களில் நிறைய பேர் இருந்தனர். அவர்களுக்கு கபசுர குடிநீர் கசாயத்தைக் கொடுத்தோம். அதனால்தான் அங்கெல்லாம் கொரோனா தொற்று பரவவில்லை. அது கட்டுக்குள் வந்தது என்று சொல்லப்பட்டதாம். அதை குறிப்பெடுத்துக் கொண்டார்களாம். ஏன் இதை மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் ஏன், இந்தியா முழுவதும் எங்கெங்கு கொரோனா தொற்று அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் கபசுர குடிநீரை கொடுக்கலாமே. இதைப்பற்றி மத்திய அரசிடம் பேசுகிறோம் என்றார்களாம்.

அதற்குப் பதில் அளித்த கணேஷ், ``நாங்கள் தேவையான ஸ்டாக் வைத்திருக்கிறோம். நீங்கள் சொன்னால், உடனே சப்ளை செய்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.கபசுரத்தின் குறிகுணங்களாக கூறப்பட்ட குரல் கம்மல், இருமல், மூச்சிரைப்பு, சுரம் போன்ற முக்கிய குணங்கள் கொரோனா நோயிலும் முக்கிய குறிகுணங்களாக இருந்ததால் அந்த கபசுரத்துக்குப் பயன்பட்ட ஒரு மருந்தை நாம் ஏன் இந்தப் புதிய நோய்க்கு முயற்சிக்கக் கூடாது? என்று சித்த மருத்துவ மூத்த நிபுணர்கள் ஆலோசித்து தேர்ந்தெடுத்து சொன்ன மருந்துதான் கபசுரக் குடிநீர்.


Tags : crew ,drinking water OFFICER ,IAS , Kapasura Drinking Water, IAS Officer, Central Committee
× RELATED ரஷ்யாவில் ராணுவ விமானம் திடீரென தீப்பிடித்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு?