×

புதுச்சேரி ஜிப்மரில் ஜெனரல் வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு கொரோனா உறுதி: மருத்துவர்கள், செவிலியர்கள் பீதி

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில், உடல்நிலை பாதித்து பரிசோதனைக்கு வந்தவரில் முதன்முறையாக ஒரு மூதாட்டிக்கு கொரோனா தொற்று வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்த அந்த பெண் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  புதுச்சேரியில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் கோரிமேட்டில் உள்ள மத்திய அரசின் சுகாதார நிறுவனமான ஜிப்மரில், கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகிறது. இங்கு பலருக்கு தினந்தோறும் சோதனை செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த 64 வயது  மூதாட்டி, வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக (புற்றுநோய்) நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானது.

அவருடன் துணையாக வந்த 40 வயதுள்ள  ஒரு பெண் மற்றும் 45 வயதுள்ள ஆண் ஆகியோருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.  இதையடுத்து 3 பேரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்ட 44 எண் கொண்ட வார்டு ( பொதுமருத்துவம்) சீல் வைக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த மருத்துவர், செவிலியர், சுகாதார ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், அவர் வசித்த பகுதிக்கு சீல் வைத்து தனிமைப்படுத்துதல் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  கொரோனா பாதித்த மூதாட்டியுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோயம்பேட்டிலிருந்து வந்தவருக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு, கப்பியாம்புலியூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்களை மாவட்ட நிர்வாகம் வீடுகளில் சோதனை செய்து வருகின்றது. அதன்படி, ஆவுடையார்பட்டை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்த உறவினர்கள், நண்பர்களையும் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Tags : Ward ,persons ,Jibmer ,Doctors ,nurses ,Puducherry , Puducherry Jibmer, Corona, Doctors, Nurses
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!